க்ரீமி கிறிஸ்மஸ் பம்போலினி (Creamy christhmas bamboloni recipe in tamil)

க்ரீமி கிறிஸ்மஸ் பம்போலினி (Creamy christhmas bamboloni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பால்,சர்க்கரை மற்றும் ஆக்டிவேட்டட் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த பின்னர் அதில் ஒரு முட்டை சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு அதில் வெண்ணையை போடவும் அனைத்தையும் நன்கு கலக்கவும். கலக்கிய பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும். ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மாவு பொங்கி வரும் வரை காத்திருக்கவும்.
- 2
ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகும் நேரத்தில் நாம் கஸ்டர்ட் கிரீம் செய்திடலாம். ஒரு சாஸ் பேனில் அரை கப் பால் சேர்த்து அதில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு நுரை வரும் வரை கிண்டவும். பிறகு அதை அடுப்பில் வைத்து மீதி அரை கப் பால் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அது க்ரீம் பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பை அணைத்து கிரீமை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
- 3
பிறகு மாவு நன்கு பொங்கிய பின்னர் அதை நன்கு திரட்டி குக்கி கட்டர் வைத்து விருப்பமான உருவங்களில் வெட்டிக் கொள்ளலாம். வெட்டிய உருவங்களை ஈரத் துணியை வைத்து மூடி கொஞ்ச நேரம் விடவேண்டும்.
- 4
மாவு எழுந்து வரும் நேரத்தில் ஒரு மிக்ஸியில் கால் கப் சர்க்கரை சேர்த்து அதில் பட்டை தூள் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
நாம் வெட்டிவைத்த உருவங்களை எண்ணெயை சூடாக்கி அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 6
பொரித்தெடுத்த மாவை சர்க்கரை டிபில் போட்டு கோட் செய்துகொள்ளவேண்டும். செய்த பிறகு ஒரு கத்தியை வைத்து பம்போலினியில் கோடு போட்டு அதில் கஸ்டட் கிரீமை உள்ளே தடவவேண்டும். தடவிய பின்னர் ருசியான கிரீமி கஸ்டட் பம்போலினி தயாராகிவிடும். நீங்களும் செய்து பாருங்கள்
- 7
Similar Recipes
More Recipes
























கமெண்ட்