சமையல் குறிப்புகள்
- 1
மைதா, ரவை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை 30நிமிடம் ஊற விடவும்.
- 2
அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி தயார்!!!
- 3
மிக்ஸியில் மிளகு பொடி, இஞ்சி, சீரகப்பொடி, உப்பு, கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
அரைத்து வைத்த பேஸ்டை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து வடிகட்டிய பிறகு தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பானி தயார்!!!
- 5
பின்பு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை மசித்து அத்துடன், மிளகாய் தூள், உப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மசாலா தயார்!!!
- 6
இறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால், பானி பூரி ரெடி!!!
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்