ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மா பீன்ஸை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.அரிசி 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கூக்கரில் ராஜ்மா பீன்ஸை 8-10 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கூக்கரில் எண்ணெய் 3 டேபூள் ஸ்பூன்,நெய் 1டீஸ்பூன் விட்டு கடுகு, சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
வதங்கியதில் ராஜ்மா பீன்ஸ், அரிசி சேர்த்து கலந்து பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாயை தூள், உப்பு, கரமசாலா சேர்த்து ராஜ்மா வேகவைத்த தண்ணீரை ஊற்றி 2 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- 6
ருசியான ராஜ்மா பீன்ஸ் புலாவ் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14473584
















கமெண்ட்