முட்டைக்கோஸ் கோப்தா/cabbage (Muttaikosh kofta recipe in tamil)

முட்டைக்கோஸ் கோப்தா/cabbage (Muttaikosh kofta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் பெரிய வெங்காயத்தை 2, பச்சை மிளகாயை 2,பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
நறுக்கிய முட்டைக்கோஸ் வெங்காயமத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது,கோதுமை மாவு,மைதா மாவு,சோழ மாவு மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், கரமசாலா, மல்லி தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் அதை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 3
அந்த உருண்டை எண்ணெய் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் அதில் இஞ்சி பூண்டு விழுது வரமிளகாய் தூள்,கரமசாலா, மல்லி தூள், உப்பு நன்கு வதக்கி கொள்ளவும்
- 5
பிறகு அதை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- 6
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும்.பிறகு அதில் பொரித்த உருண்டை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
- 7
ருசியான முட்டைக்கோஸ் கோப்தா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்