ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)

கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20#
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20#
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி கேழ்வரகு மாவை வானலியில் போட்டு லேசாக வறுக்கவும் அதில் சிறிது தண்ணீர் விட்டு புட்டு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 2
பனைவெல்லத்தை கடாயில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் பிசைந்து வைத்த புட்டு மாவை வைத்து வேக விடவும். வெந்த ராகி புட்டு மாவைஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி வடிகட்டிய பனை வெல்லத் தண்ணீரை கடாயில் ஊற்றவும் பனை வெல்லம் நன்றாக கெட்டியாக பாகு பதத்திற்கு வரும்வரை கிளறவும் அதன்பின் வேகவைத்த ராகி புட்டு மாவை பாகில் போட்டு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்த்துருவல் நெய் சேர்த்து கிளறவும் சுவையான சத்தான ராகி மாவு புட்டு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (2)