முருங்கைகாய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- 3
பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 4
பின்பு அத்துடன் நறுக்கி வைத்துள்ள முருங்கை காய் சேர்த்து உப்பு தூவி, நன்கு பிரட்டி விட வேண்டும்.
- 5
பிறகு அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
- 6
பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.
- 7
பின்னர் தேவையான அளவு உப்பு தூவி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் ரெடி!!!
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்