முருங்கைகாய் நெய் பருப்பு

Santhi Chowthri @cook_18897468
முருங்கைகாய் நெய் பருப்பு
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காய் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் பருப்பை சேர்த்து முருங்கைக்காய் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்
- 2
இவற்றுடன் ஓர் டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்
- 3
இவை அனைத்தும் நன்கு வெந்தவுடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடவும். காரம் குறைவாக தேவைப்பட்டால் இரண்டு காய்ந்த மிளகாயை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் மிளகாய் தூளுக்கு பதிலாக.
- 4
எப்பொழுது நன்றாக கொதித்து பருப்பு பதம் வரும் பொழுது 2 ஸ்பூன் நெய் விட்டு கலந்து இறக்கிவைக்க சுவையான முருங்கைக்காய் நெய் பருப்பு தயார். சூடான சாதத்துடன் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14695660











கமெண்ட்