சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவை எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் எண்ணெய் ஓரு அபூன் சேர்த்து பிசைந்து ஊற விடவும்.
- 2
குக்கரில் ஒரு உருளைக்கிழங்கு, ஒரு கேரட் வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளவும்.. தேவையான அளவு வெங்காயம், குடைமிளகாய், முட்டை கோஸ் நறுக்கி வைக்கவும். ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்கவும்
- 3
பின் குடைமிளகாய் சேர்த்து வதக்கி அதில் மசித்த உருளை மற்றும் கேரட் சேர்த்து கிளறவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி இரக்கவும்.
- 4
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை பழம், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் சப்பாத்தி மாவை தேய்த்து சட்டியில் போட்டு எடுக்கவும்
- 5
பின் அதை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் தக்காளி சாஸ், சீஸ், புதினா சட்னி சேர்த்து கொள்ளவும். பின் வெங்காயம்,கோஸ் சேர்க்கவும்
- 6
உருளை மசியலை சேர்த்து சப்பாத்தியை காண்பிக்கும் முறையில் மடிக்கவும்.
- 7
அலுமினியம் பாயில் சேர்த்து ரோல் செய்யவும். சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பிரங்கி தயார்
Similar Recipes
More Recipes





















கமெண்ட்