{மட்டன் தம் பிரியாணி {mutton dumbriyani tamil}
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரஷர் குக்கரில் மட்டன் துண்டுகள் மற்றும் மஞ்சள்தூள், உப்பு,சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் 4 - 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு மசாலா தூள் அரைக்க மிக்ஸி ஜாரில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, சோம்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
- 2
அடுத்தது பிரியாணி செய்ய ஒரு அகல பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, பிரியாணி இலை, அன்னாசி பூ, கல்பாசி, ஜாவிதிரி, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்தது பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறி பச்சை வாசனை போன பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கிய பிறகு அரைத்த மசாலா தூள் மற்றும் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், கல் உப்பு, கரம் மசாலா தூள், சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். அடுத்து வேக வைத்த மட்டன் துண்டுகளை தண்ணீரின்றி சேர்த்து கிளறவும். பிறகு ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் வேக வைத்த மட்டன் தண்ணீர் சேர்க்கலாம் (இல்லையென்றால் வெந்நீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
- 4
இதில் எலுமிச்சை சாறு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அரிசியை சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- 5
அரிசி பாதி வெந்த பின் பிரியாணியை லேசாக கிண்டி அதன்மேல் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை புதினா இலை தூவி வாழை இலையால் பிரியாணியை மூடவும். அடுத்தது பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தோசை தவாவை அடுப்பில் வைக்கவும். தோசை கல் சூடான பின் இறக்கிய பாத்திரத்தை அதன் மீது வைத்து தீயை நன்கு குறைக்கவும்.
- 6
அடுத்து பாத்திரத்தை தட்டு மூடி அதன் மேல் ஒரு கனமான தட்டை வைத்து 20 நிமிடங்களுக்கு தம் வைக்கவும். பிறகு 20 நிமிடம் கழித்து கொத்துமல்லி இலை சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும்.
- 7
மட்டன் தம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்