மாம்பழ ரவா கேசரி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும், முந்திரிப் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
- 2
பிறகு அந்த நெய்யிலேயே பம்பாய் ரவையைப் போட்டு வறுக்கவும்.
- 3
இதனுடன் மாம்பழக் கூழ் விட்டுக் கிளறவும்.
- 4
ஒன்றரை கப் தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்து கெட்டியாகும்.
- 5
இப்போது கல்கண்டு பொடி, ஒரு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும்.
- 6
கெட்டியானவுடன் ஏலக்காய் தூள், மீதி இருக்கும் நெய் விட்டுக் கிளறவும்.
- 7
வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14744788










கமெண்ட்