சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தை தோல் உரித்து, பூண்டு தோல் உரிக்கவேண்டும். புளி ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கத்திரிக்கா காம்பு நீக்கி நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்.
- 2
வேர்க்கடலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் நல்ல எண்னெய் ஊற்றி வரகொத்தமல்லி, க. பருப்பு, வெந்தயம், எள், தேங்காய் துருவல், வேர்க்கடலை நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எல்லா கத்திரிக்கா யை போட்டு நன்றாக வதக்கவும். பாதி வேகும் வரை வதக்கவும். பிறகு தனியாக எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு
- 3
தக்காளி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் பூண்டு வதக்கி, பிறகு 6 வரமிளகாய் போட்டு வதக்கவும்.
- 4
பின்னர் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கத்திரிக்காயை போட்டு கொதிக்கவிடவும். பிறகு மிக்சியில் அரைத்த விழுதை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் கடைசியில் பெருங்காயம் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு 4ஸ்புன் நாட்டுசர்க்கரை போட்டு கலக்கவும். 4ஸ்புன் நல்ல எண்னெய் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 5
சூடான சுவையான எண்ணெய் கத்திரிக்கா குழம்பு ரெடி. பருப்பு சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (5)