கோகோநட் பன்(coconut bun)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல் கூட சீனி டூட்டி பிருட்டி
- 2
திராட்சை,முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பால் கூட ஈஸ்ட் மட்டும் சீனி சேர்த்து கலந்து 15 நிமிடம் நொதிக்க வைக்கவும்
- 4
இப்படி நன்கு நொதித்து வர வேண்டும்
- 5
மைதாவுடன் முட்டை,சீனி வெண்ணெய் சேர்க்கவும்
- 6
கூடவே நொதித்த பால்,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
இப்போம் கொஞ்சம் மாவு தட்டி அதில் கலந்து வைத்த மாவு வைத்து 15 நிமிடம் மாவை நன்கு இழுத்து பிசையவும்
- 8
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவு வைத்து அதன் மேல் எண்ணெய் தடவி
- 9
ஒரு ஈரமான துணி போட்டு மூடி 1 - 2 மணி நேரம் ப்ரூப் பண்ண விடவும்
- 10
மாவு நன்கு பொங்கி உள்ளது இப்போம் நடுல ஒரு பஞ்ச் செய்யவும்
- 11
மறுபடியும் மாவு தட்டி அதில் மாவு வைத்து 6 பாகமா பிரித்து கொள்ளவும்
- 12
ஒரு பாலை எடுத்து திரட்டி கொள்ளவும்.படத்தில் கொடுத்த மாதிரி ஒரு பக்கம் கொடு போடவும்
- 13
இப்போம் அதை மடித்து கொள்ளவும்.சைடு எல்லாம் அழுத்தி விடவும்
- 14
தேங்காய் பில்லிங் நடுவில் வைத்து படத்தில் உள்ள மாதிரி மடித்து கொள்ளவும்
- 15
பேக்கிங் ட்ரைல வெண்ணெய் மைதா பூசி வைக்கவும் அதில் இந்த பன் அடுக்கி வைத்து
- 16
மேல ஈரமான துணி போட்டு ஒரு 30 நிமிடம் ப்ரூப் பண்ண வைக்கவும்
- 17
நல்ல ப்ரூப் ஆகி உள்ளது
- 18
இப்போம் பால் மற்றும் முட்டையை கலந்து வைத்து கொள்ளவும்
- 19
அதை மேலே பிரஷ் செய்யவும்.சைடுல தேவை பட்ட எள்ளு தூவி
- 20
15 நிமிடம் ப்ரீ ஹீட் பண்ணுன ஓவென்ல 30 நிமிடம் 180 செலிசியஸ் வைத்து பேக் பண்ணி எடுக்கவும்
- 21
சுவையான கோகோநட் பன் தயார்
மேலே வெண்ணெய் தடவவும் - 22
சூப்பர் சாப்ட்டான கோகோநட் பன் தயார்
Keywords
Similar Recipes
More Recipes




















































கமெண்ட் (4)