Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)

#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸிங் பௌலில் 2 முட்டையிலுள்ள வெள்ளை கருவை தனியாக பிரித்து நன்கு அடித்து நுரை வரும்வரை க்ரீம் முழுமையாக வரும்வரை கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
நாட்டுச்சக்கரை மெசரிங் கப்பில் எடுத்து அதில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
- 3
அதன் பிறகு மஞ்சள் கருவையும் அதனுடன் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி அதே பௌலில் ஒரு கப் கோதுமை மாவை சலித்து சேர்க்கவும்.
- 4
பேக்கிங் பவுடர் இந்த ஸ்பூன் அளவில் ஒரு ஸ்பூன் மற்றும் பேக்கிங் சோடா அரை ஸ்பூன் அளவில் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டுள்ளேன்
- 5
நன்கு அடித்து கலக்கவும் தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம் ஒன்றிலிருந்து ஒன்றரை ஸ்பூன் வரை. அதனுடன் கால் கப் மெசரிங் கப்பில் ரீபைன்டு ஆயில் சேர்க்கவும்
- 6
பிறகு எந்த கிண்ணத்தில் கேக் செய்ய போகிறோமோ அதில் எண்ணை சுற்றி கிரீஸ் செய்து கொண்டு பட்டர் பேப்பர் வைத்து அதன்பிறகும் கிரீஸ் செய்துகொண்டு ஒரு குக்கரில் அடியில் கல்லுப்பு அல்லது மணல் சேர்த்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு செட் செய்து கொள்ளவும் நடுவில் கிண்ணத்தை வைத்து குக்கர் மூடியை மூடி 45 லிருந்து ஒரு மணி நேரம் வரை பேக் செய்து எடுத்தால் சுவையான கோதுமை கேக் தயார்
- 7
பேக்கிங் டைம் முடிந்த உடன் சூடு ஆறிய பிறகு அதை திருப்பி வைத்து பீஸ் போட்டு பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்