டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்...

டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்

#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-35 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 1கப் நன்கு பழுத்த மாம்பழ துண்டுகள்
  2. 1 கப் மைதா
  3. 1/2 கப் சக்கரை
  4. 1/4 கப் ஆயில்
  5. 1/2 கப் பால்
  6. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 2 சொட்டு வெண்ணிலா எசென்ஸ்
  9. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

30-35 நிமிடம்
  1. 1

    முதலில் மாம்பழம், சக்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து விழுதாக்கிக்கவும்.

  2. 2

    ஒரு பவுலில் அரைத்த மாம்பழ விழுது சேர்த்து அத்துடன் ஆயில் சேர்த்து நன்கு பீட் செய்துக்கவும், அதன்பிறகு வெண்ணிலா எசென்ஸ் விட்டு நன்கு கலந்துக்கவும்

  3. 3

    அத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஒரு சல்லடையில் சலித்து, மாம்பழ விழுதுடன் சேர்த்து மெதுவாக கலக்கவும்

  4. 4

    அதில் எடுத்து வைத்திருக்கும் பால் சேர்த்து ஒரே சைடு ஆக மடிப்பதுபோல் கலந்துக்கவும். அத்துடன் டூட்டி ப்ரூட்டி சேர்த்து கலந்து வைத்து க்கவும்.கேக் டின்னில் பட்டர் பேப்பர் வைத்து நெய் தடவி ரெடியாக வைத்து கொள்ளவும்

  5. 5

    ஒரு அடிகனமான சட்டியை ஸ்டவ்வில் வைத்து (அல்லது குக்கரில்) ஒரு ஸ்டாண்ட் வைத்து 5 நிமிடம் ப்ரி ஹீட் பண்ணிக்கவும்.

  6. 6

    கேக் கலவையை கேக் டின்னில் ஊற்றி மேலே அழகுக்கு டூட்டி ப்ரூட்டி தூவி நன்றாக டாப் செய்து அதை ப்ரி ஹீட் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தில் வைத்து நன்கு டைட்டாக மூடி, மிதமான ஹீட்டில் 30-35 நிமிடத்துக்கு வேக விடவும்

  7. 7

    நன்கு வேக வைத்த கேக்கை சட்டியில் இருந்து எடுத்து ஆற விட்டு, திருப்பி தட்டினால் டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக் டின்னில் ஒட்டாமல் அழகா வந்து விடும்.. மேல் டூட்டி ப் ருடியுடன் பாக்கிறதுக்கு மிக அழகாக இருக்கும்.

  8. 8

    சுவையான டூட்டி ப்ருடி மாம்பழ கேக் விருப்பமான வடிவில் கட் செய்து சாப்பிடவும்... மிக மிக சுவையாகவும் பஞ்சு போன்றும் இருக்கும்... சற்றிலும் உலர்ந்த மாம்பழ தூண்டுகளினால் அலங்கரிக்கவும் (mango candy).குறிப்பு - கேக்கில் கலர் எதுவும் சேர்க்க வில்லை, மாம்பழத்தின் கலர் தான்.... மாம்பழத்தின் இனிப்பு பார்த்து சக்கரை சேர்த்துக்கவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes