ரவா இட்லி பர்கர்

#cookwithsugu
இந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன்.
ரவா இட்லி பர்கர்
#cookwithsugu
இந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். 1/2 கப் ரவை 1/4 கப் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த கலவையை 20 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
- 3
20 நிமிடம் கழித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து. கொள்ளவும்
- 4
இப்பொழுது அதை இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் நம்முடைய ரவா இட்லி தயார். செய்து வைத்த இட்லியை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 5
வாணலியில் 1/2 டேபிள்ஸ்பூன் வெண்ணை சேர்த்து வெட்டி வைத்த இட்லியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 6
உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
- 7
அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் பிரட் கிரம்ஸ் 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கொள்ளவும்
- 8
அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ரவை, 1/2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1/4 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- 9
இப்பொழுது தேவைக்கேற்ப மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 10
பிசைந்த உருளைக்கிழங்கு பொரியலில் இருந்து சிறிதளவு எடுத்து கையில் தட்டி வடை போல் செய்து வைத்துக் கொள்ளவும். நம்முடைய பட்டீஸ் ரெடி
- 11
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து செய்து வைத்திருக்கும் பட்டீஸ் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 12
பர்கரை அடுக்குவதற்கு முதலில் நம் இட்லி துண்டில் ஒரு பக்கம் மயோனைஸ் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் கெட்சப் சேர்த்து கொள்ளவும்.
- 13
இதன்மேல் லெட்டூஸ் மற்றும் நாம் செய்திருக்கும் உருளைக்கிழங்கு பட்டீஸ் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மயோனைஸ் கொஞ்சம் மற்றும் கெட்சப் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்
- 14
இதன் மேல் ஒரு சீஸ் சீட் சேர்த்துக் கொள்ளவும். (சீ சீட் இல்லை என்றால் துருவிய சீஸ் கூட பயன்படுத்தலாம்). அதன் பின்னர் மற்றொரு இட்லியில் மயோனைஸ் மற்றும் கெட்சப் தடவி அதன் மேல் சேர்த்து வைக்கவும்.
- 15
மேலே சிறிது எள் சேர்த்துக் கொள்ளவும். நம்முடைய சுவையான இட்லி பர்கர் தயார்
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட்