பெப்பர் பிரட் ஆம்லெட்
#vattaram
Week 7
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 2 முட்டையை உடைத்து ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு ஒரு ஸ்பூன் வைத்து அதனை நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்
- 3
பிறகு தோசைக்கல்லை சூடுபடுத்தி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கல் முழுவதும் தேய்த்து விட வேண்டும்
- 4
பிறகு நாம் கலக்கி வைத்துள்ள முட்டையை தோசைக்கல்லில் ஊற்றி தோசைக்கல் முழுவதும் பரப்பி அதன் மேல் பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக வைக்கவேண்டும்
- 5
பிரெட் துண்டுகளை முட்டையில் ஒரு புறம் நனைந்தபின் மறுபுறம் திருப்பி வைக்க வேண்டும்
- 6
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத் தூளை பிரட் முட்டை என எல்லா இடங்களிலும் படும்படி தூவிவிட்டு முட்டையின் ஓரங்களை எடுத்து பிரெட் மேல் மடித்து வைக்க வேண்டும்
- 7
இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுத்து சூடாக பரிமாறலாம்
- 8
இதோ ஐந்தே நிமிடத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பெப்பர் பிரெட் ஆம்லெட் தயார் வாங்க சாப்பிடலாம்
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்