ஆரோக்கிய உணவுகள்

#cookerylifestyle
1.சர்க்கரை பொங்கல்
2.வெண்பொங்கல்
3.முருங்கைக்கீரை சாம்பார்
4. துவரம்பருப்புதுவையல்
என்னிடம் ஒரு மிகப் பழமையான மரத்திருவல் இருக்கிறது. அது மிகவும் கனமாக இருக்கும். முழுவது மரத்தால் அனது. இதனை என்னுடைய அப்பா எனக்கு தந்தார்கள். அதில் என்ன விஷேசம் என்றால் , அதன்மேல் உள்ள குழிவில் நெல்லை நிரப்பி அந்த திருவலின் மேல்பகுதியை சுழற்றினால், கீழே அரிசியும் உமியும் பிரிந்து விழும். இதில் இருந்து கிடைக்கும் அரிசி சற்று பழுப்பு நிறமாக இருக்கும். கைகுத்தல் அரிசியைப்போல் இருக்கும். இதிலிருந்து அரிசியைப் பிரித்தெடுப்பதில் சற்றுநேரம் அதிகமானாலும், சத்தான அரிசியை சமைத்து உண்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறது. நெல்லில் இருந்து அரிசியை நானே பிரித்தெடுத்து வாரத்தில் இரண்டு முறை இந்த அரிசியை பயன்படுத்தி சமைப்பேன்.
இந்த திருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது என்னிடம் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.அதன் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
இந்த அரிசியைப் பயன்படுத்தி செய்த வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் நாம் அனைவரும் செய்வதுபோல செய்வேன்.
வெண்பொங்கலுக்குக்கு சேர்த்து சாப்பிடுவதற்காக முருங்கைக்கீரை சாம்பார் , துவரம்பருப்புதுவையல் அதன செய்முறையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமையல் குறிப்புகள்
- 1
துவர பருப்பை குக்கரில் நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். முருங்கை இலையை சேர்த்த பின்பு பருப்பு சரியாக வேகாது. அதனால், பருப்பை முதலிலேயே நன்றாக வேகவைக்கவேண்டும்.
- 2
கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகுதாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து, வதக்கி, காய்கறிகள், உப்பு சேர்கவும்.
- 3
காய்கறிகள் நன்றாக வதங்கியதும், சுத்தம் செய்து சிறியதாக வெட்டிய முருங்கை இலை சேர்த்து வதக்கவும், முருங்கை இலை சுருண்டு வதங்கியதும், சாம்பார் பொடி, புளிகரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு, கொத்தமல்லி இலை சேர்த்து பருப்பில் எல்லாவற்றையும், ஊற்றி குக்கரை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்.குக்கர் சத்தம் போனதும் திறந்து 1ஸ்பூன் நெய் சேர்க்கவும். நெய் மணத்துடன், முருங்கை இலை சுவையுடன் நானே மரத்திருவலில் பிரித்தெடுத்த அரிசியில் செய்த வெண்பொங்கலுடன் சாப்பிட சுவையாக சத்தான, ஆரோக்கியமான, உணவாகும்.
- 4
துவரம் பருப்புதுவையல்
கடாயில் 3 ஸ்பூன் துவரம்பருப்பு, 2 பல் பூண்டு
2 வற்றல் சிறிது புளி சேர்த்து துவரம்பருப்பு சிவக்க வறுக்கவும். அதனுடன் தேவையான அளவு தேங்காய்,உப்பு சேர்த்து, மிக்சியில் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். வெண்பொங்கலுடன் துவரம்பருப்பு துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றி
Similar Recipes
More Recipes

கமெண்ட்