கருப்பு கொண்டக்கடலை கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டக்கடலை முன்னாடி நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் அதை சிறிது தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- 2
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.இஞ்சி பூண்டு விழுது எடுத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், அன்னாசி மொட்டு, கல்பாசி சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
நறுக்கிய தக்காளியை அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
பின்னர் ஏற்கனவே வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு சுண்டியதும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
- 6
நன்கு சுண்டியதும், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (2)