காஞ்சிபுரம் கோவில் இட்லி

#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம்
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் நான்கு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 2
அடுத்து தாளிப்பு வானல் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து,நெய் உருகியதும் ஐந்திலிருந்து ஆறு முந்திரிப் பருப்பை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 3
அடுத்து ஒரு படி இட்லி அரிசி 100 கிராம் உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு, அதை புளிக்க வைத்து கொள்ள வேண்டும்.லேசாக புளித்த பிறகு மாவிற்கு தேவையான அளவு உப்பு சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும்.
- 4
கலந்த பிறகு அதில் ரெண்டு ஸ்பூன் சுக்குப் பொடி, வறுத்த முந்திரிப் பருப்பு,கால் ஸ்பூன் மிளகுப்பொடி,கால் ஸ்பூன் சீரகப் பொடி,இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் அது கூடவே தாளித்ததையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
கலந்த பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் உள்லே வாழை இலையை சுருட்டி படத்தில் காட்டியவாறு வைத்துக் கொள்ளவும்
- 6
வாழையிலையை உள்ளே வைத்த பிறகு அதனுள் மாவை பாதிவரை ஊற்றிக் கொள்ளவும். ஊற்றிய பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் ஸ்டாண்ட் வைத்து, அதன் மேலே மாவு ஊற்றிய பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 30 நிமிடம் வேக வைக்கவும்
- 7
வெந்த பிறகு வெளியே எடுத்து இட்லியை தட்டிற்கு மாற்றி,கத்தியின் உதவி கொண்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
- 8
கட் செய்த பிறகு தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.காஞ்சிபுரம் கோவில் இட்லி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்