தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் தினை அரிசி
  2. 3/4 கப் பாசிப்பருப்பு
  3. 6 டேபிள் ஸ்பூன் நெய்
  4. 1/3 கப் எண்ணெய்
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 1 ஸ்பூன் மிளகு
  7. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  8. 1 ஸ்பூன் உப்பு
  9. சிறிதுகறிவேப்பிலை
  10. 25 முந்திரி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தினை அரிசியை அளந்து எடுக்கவும் கூட பாசிப்பருப்பையும் அளந்து எடுக்கவும்

  2. 2

    பின் தண்ணீர் சேர்த்து இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்

  3. 3

    பின் 5 கப் தண்ணீர் சேர்த்து கூட சிறிது நெய் விட்டு நன்றாக கலந்து குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கவும்

  4. 4

    ப்ரஷர் அடங்க 20_25 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு முறை நன்றாக கிளறி விடவும் பின் சிறிது நெய் விட்டு முந்திரி சேர்க்கவும்

  5. 5

    முந்திரி சிவக்க வறுத்து கொட்டவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடாக்கவும்

  6. 6

    சூடானதும் மிளகு சேர்த்து பொரிய விடவும் பின் சீரகம் சேர்த்து வறுக்கவும்

  7. 7

    பின் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும் பின் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி கொட்டவும்

  8. 8

    பின் உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் எண்ணெய் உடன் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும்

  9. 9

    பின் பொங்கல் உடன் சேர்த்து நன்றாக கிளறவும்

  10. 10

    சுவையான ஆரோக்கியமான தினை பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes