விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)

#npd1 Mastry box challenge
இந்த கொழுக்கட்டை இரண்டு நிறத்தில் செய்துள்ளேன். அதில் பூரணமாக வாழைக்காய் பொடிமாஸ் வைத்துள்ளேன். இந்த ரெசிபியை அழகுபடுத்த கேஷா க்ரீமையும் வெத்தல பிஸ்த்தோ,சுட்ட மிளகாய் சட்னியும் வைத்து அழகு படுத்தி உள்ளேன்.
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#npd1 Mastry box challenge
இந்த கொழுக்கட்டை இரண்டு நிறத்தில் செய்துள்ளேன். அதில் பூரணமாக வாழைக்காய் பொடிமாஸ் வைத்துள்ளேன். இந்த ரெசிபியை அழகுபடுத்த கேஷா க்ரீமையும் வெத்தல பிஸ்த்தோ,சுட்ட மிளகாய் சட்னியும் வைத்து அழகு படுத்தி உள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் அரிசி மாவை இரண்டு பாத்திரம் எடுத்து அதில் ஒரு பாத்திரத்தில் 50 கிராமும் மற்றொரு பாத்திரத்தில் 50 கிராம் என பிரித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் 10 சங்கு பூவை சுடுதண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு பூக்களை அகற்றிவிட்டு வெறும் சாரை எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் வெள்ளை கலராகவும் மற்றொரு பாத்திரத்தில் சங்குப்பூ தண்ணீரை ஊற்றி நீலக்கலர் ஆகவும் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் வாழைக்காய் பொடிமாஸ் செய்ய ஒரு வாழைக்காயை சுடுதண்ணீரில் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.வேகவைத்த பிறகு வாழைக்காயை மசித்து வைத்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு பெரிய வெங்காயம் வேக வைத்து மசித்த வாழைக்காய் போட்டு நன்கு கிளறிக் கொள்ளவும். கிளறிய பிறகு அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும். வாழைக்காய் பொடிமாஸ் ரெடி
- 6
அடுத்து கொழுக்கட்டை மாவை இரண்டையும் எடுத்து ஒரு ஒன்றோடு ஒன்று இணைத்து கிண்ணம் வடிவில் செய்துகொள்ளவும்.
- 7
செய்தபிறகு அதனுள்ளே வாழைக்காய் பொடிமாஸ் வைத்து மூடி கொழுக்கட்டை போல் பிடித்துக் கொள்ளவும்.
- 8
பிடித்த பிறகு அதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து கொள்ளவும். அவ்வளவுதான் கொழுக்கட்டை தயார்
- 9
கொழுக்கட்டையை வேகவைத்து எடுத்து தட்டிற்கு மாற்றி அதில் வெற்றிலை பிஸ்தோ, காஷ்சோ க்ரீம் சுட்ட மிளகாய் சட்னி வைத்து பறிமாறினாள் சுவை அட்டகாசமாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்