கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் அதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு பல்சில் அரைத்துக்கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் அதை வடித்து மீண்டும் கொதிக்க விடவும்.
- 5
கருப்பட்டி கையில் ஒட்டும் பதத்துக்கு இருந்தால் போதும்.
- 6
ஒரு கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி திராட்சை அனைத்தும் பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்
- 7
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அத்துடன் முந்திரி திராட்சையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 8
கருப்பட்டிப் பாகை சிறிது சிறிதாக அந்தக் கலவையில் விட்டு உருண்டை பிடிக்கும் பக்குவம் வரும் வரையில் கிளறிக் கொள்ளவும்.
- 9
இனி சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். சுவையான கடலை உருண்டை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்