சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)

#ed1
சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது

சமையல் குறிப்புகள்
- 1
1 கப் சிவப்பு பீன்ஸை தோல் நீக்கி கழுவி எடுத்து வைக்கவும். 2 பெரிய வெங்காயம், 2 பெரிய தக்காளி, இஞ்சி பூண்டு தோல் நீக்கி கழுவி எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் நெய், 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் சீரகம், 1 துண்டு பட்டை, 2 கிராம்பு, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 2
இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கி விட்டு, அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து சேர்க்கவும். நன்கு பச்சை வாசனை போக வதக்கி விடவும். நன்கு வதங்கிய வுடன் 2 தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதனுடன் சேர்க்கவும்.
- 3
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் தனியாத்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். நன்கு பச்சை வாசனை நீங்க கொதிக்கவிடவும். வேகவைத்த சிவப்பு பீன்ஸை தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும்.
- 4
வெந்த சிவப்பு பீன்ஸை கொதிக்கும் மசாலாவில் சேர்க்கவும். நன்கு கலக்கி விட்டு சிறிது நேரம் வேகவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு சேர்க்கவும்.
- 5
சுவையான சிவப்பு பீன்ஸ் மசாலா ரெடி.😋😋 இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சூடான சாதத்திற்கும் ஏற்றது.
Top Search in
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)