ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள ராகி மாவு கோதுமை மாவு தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை 15 நிமிடங்கள் ஊறவிடவும். பொதுவாக பூரிக்கு மாவு பிசையும் பதத்தை விட சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து கொள்ளவும். (பூரி தேய்த்து வைத்த பின்பு போடுவதை தவிர்த்து ஒரு பூரி பொரித்து எடுத்த பின்பு மற்றொன்று தேய்த்து போடுவது நன்று).பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு இருபுறமும் நன்றாக பொரியவிட்டு எடுக்கவும் இப்போது சத்தான ராகி பூரி தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்