காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)

#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. ஒன்றரை முட்டை
  2. 100 கிராம் சர்க்கரை
  3. 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  4. ஒரு சிட்டிகை மஞ்சள் நிற கலர் பவுடர்
  5. 125 கிராம் மைதா
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 2ஸ்பூன் எண்ணெய்
  8. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பௌலில் ஒரு முழு முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும்.பிறகு இரண்டாவது முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டுமே சேர்த்து கொள்ளவும்,ஆக மொத்தம் ஒன்று அரை முட்டை.

  2. 2

    அதை சேர்த்த பிறகு அதில் ஒரு விஸ்க் வைத்து முட்டையை நன்கு கலந்து கொள்ள வேண்டும். கலந்த பிறகு அதில் 100 கிராம் சர்க்கரை பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    கலந்த பிறகு,அதில் 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்,2 ஸ்பூன் எண்ணெய்,ஒரு சிட்டிகை மஞ்சள் நிற கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    கலந்த பிறகு,அதில் மாவு பொருட்களைச் சேர்த்து கொள்ளவும். அதாவது மைதா மாவு 125 கிராம்,ஒரு சிட்டிகை உப்பு,ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்து ஒரு முறை கலந்து விட்டு கொள்ளவும், பிறகு முட்டையுடன் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    அடுத்து தயாரான மாவை ஒரு கவரில் போட்டு அதன் முனையை கட் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு தட்டில் நெய் தடவி அதன் மேலே பட்டர் போப்பரை வைத்து அதில் அந்த மாவு ஊற்றிய கவரை பிழிந்து ட்ராப் வடிவில் விடவும். படத்தில் உள்ளது போல்

  6. 6

    விட்ட பிறகு,ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். செய்த பிறகு அதில் அந்த தட்டை வைத்து மூடி போட்டு 10 இல் லிருந்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து பேக் செய்து கொள்ளவும்.

  7. 7

    15 நிமிடம் கழித்து வெளியே எடுத்து அதை 5 நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அதில் உள்ள காயின் பிஸ்கெட்யை பட்டர் பேப்பரில் இருந்து எடுத்தால் அழகாக வந்து விடும்.

  8. 8

    அவ்ளோ தான் என் 2.30 வயது பையனுக்கு பிடித்த காயின் பிஸ்கெட் தயார். இதன் ரெசிபியை இதோ உங்களுக்காக இங்கு பதிவிட்டு உள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes