வெண்டைக்காய் மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)

வெண்டைக்காய் மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
6 வெண்டைக்காயை கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிது கறிவேப்பிலையை கழுவி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் நறுக்கிய வெண்டைக்காய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நன்கு வதக்கி விடவும்.
- 2
மோர் குழம்பு செய்வதற்கு அரைக்க: 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு ஊற வைத்தது, 1 துண்டு இஞ்சி, 3 பச்சை மிளகாய், 1/2 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் தனியா, 4 சின்ன வெங்காயம், 2 டீஸ்பூன் தேங்காய் துருவல், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைக்கவும்.
- 3
1 கப் புளித்த தயிர் எடுத்து வைக்கவும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தயிர், உப்பு சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து, மோர் குழம்பை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
- 4
ஓரங்களில் நுரை வரும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, தாளித்து, வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து விடவும். சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.😋😋
Top Search in
Similar Recipes
More Recipes














கமெண்ட் (6)