பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)

#welcome2022
இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022
இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவு பருத்தி விதையை 150 கி ஊறவைக்க வேண்டும் பின் அடுத்த நாள் காலை கைப்பிடி அளவு பச்சரியை 1/2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும் வெல்லத்தை கரைக்க வேண்டும்
- 2
முதலில் கிரைண்டரில் ஊறவைத்த பச்சரியை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பின் அதை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
- 4
பின் இரவு முழுவதும் ஊறவைத்த பருத்தி விதையை கிரைண்டரில் அரைத்து அதை பிழிந்துக் கொள்ள வேண்டும் இதை 3 முறை அரைத்து பால் பிழிந்து எடுக்கவும்
- 5
பிறகு வெல்லத்தை அப்படியே போட்டால் கல் மற்றும் தூசி இருக்கலாம் எனவே 1 pinch சுக்கு மற்றும் 2 ஏலக்காய் இரண்டையும் இடித்து எடுத்துக் கொள்ளவும் பின் கடாயில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
சிறிது கொதிக்க ஆரம்பிக்கவும் வெல்லத்தைச் சேர்க்கவும் பின் அதில் இடித்து எடுத்த சுக்கு மற்றும் ஏலக்காயைச் சேர்க்கவும் வெல்லம் கரையவும் இறக்கவும் (கம்பி பதம் தேவையில்லை)
- 7
பிறகு அடி கனமான பாத்திரத்தில் அரைத்து பிழிந்த பருத்திவிதைப்பாலை வடிக்கட்டிய படியை சேர்க்கவும் கட்டி சேராமல் கிளரவும் பின் அரைத்த பச்சரிசியைச் சேர்க்கவும் கண்டிபாக அடிப்பிடிக்கும் கட்டி சேரும் நாம் கிளருவதில் தான் உள்ளது
- 8
பின் சிறிது வெந்த வாடை வரும் உடனே கரைத்த வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலவையைச் சேர்த்து கலக்கவும் இப்போது கொஞ்சம் தண்ணீர் பதம் கிடைத்ததால் சுலபமாக இருக்கும் கிளர பின் கொதித்ததும் துருவிய தேங்காயைச் சேர்க்கவும் பின் ஒருக் கிளரு கிளரிவிடவும்
- 9
பிறகு சூடாக இறக்கி பரிமாறவும் சுவையாக இருக்கும் இது சூடு என்பதால் இந்த மாதத்திற்கு ஏற்ற உணவு என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு எனது நன்றிகள் பல.......
Similar Recipes
More Recipes



























கமெண்ட் (8)