கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)

கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக் கோஸ் பொடியாக நறுக்கி அலசி வைக்கவும். பெரிய வெங்காயம் கருவேப்பிலை மல்லித்தழை பொடியாக நறுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து தண்ணீர் விட்டு தளர பிசையவும்.ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து வட்டமாக லேசாக தட்டி தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும். தேவையான எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும் சுவையான முட்டைகோஸ் கோதுமை மாவு அடை தயார்.
- 3
நெய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். சிறிதளவு துருவிய கேரட் சேர்க்கலாம்.குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்ஸில் வைத்து தரலாம். இந்த சீசனில் கிடைக்கும் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
- வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
- * வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
- வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா(vegetable oats upma recipe in tamil)
- முட்டைக்கோஸ் போண்டா(cabbage bonda recipe in tamil)










கமெண்ட் (2)