சர்க்கரைவள்ளி கிழங்கு ஹல்வா(sweet potato halwa recipe in tamil)

இனிய உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உடலுக்கு மிகவும் சக்தி தரக்கூடிய இனிப்பான சக்கரைவள்ளி கிழங்கு அல்வா செய்துள்ளேன். பெண்களுக்குத் தேவையான மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஹல்வா அனைவருக்கும் சமர்ப்பணம்.சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 லிருந்து 4 விசில் விட்டு இறக்கவும். வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மேல் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைக்கவும் அதில் 2 டீஸ்பூன் நெய் விட்டு எடுத்து வைத்துள்ள முந்திரியை பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அதே கடாயில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மிதமான தீயில் வைத்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.இடையில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கிளறவும். கிழங்கு நன்றாக பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது எடுத்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நன்றாக சர்க்கரையும் படத்தில் காட்டியவாறு கலந்து வந்தவுடன்,வறுத்த முந்திரியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 3
இப்போது சுவையான ஆரோக்கியமான சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வா தயார். மிதமான சூட்டில் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கும் உடல் எடை கூடுவதற்கு அதிக அளவில் இந்த கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட இந்த கிழங்கை சாப்பிடலாம்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்