மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)

இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆரோக்கியா மில்க் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.அதன் பின் அதில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
- 2
அதன்பின் 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு தான் இந்த கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் சூடாகி நன்கு திக்காக வரும் அதன் பின் அதில் பழங்களை சேர்த்து இறக்கிவிடவும்.
- 4
பின்னர் இக் கலவையை ஒரு பவுலில் சேர்த்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைக்க வேண்டும் விருப்பப்பட்டால் வெண்ணிலா எசன்ஸ் கஸ்டட் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.
- 5
இப்பொழுது சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றிக் கொள்ளவும் சுவையான கிரீம் ஃப்ரூட் ரெடி.
- 6
குளுகுளுவென்று சாப்பிட மிகவும் இதமாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்