உப்புமா தோசை(upma dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உப்புமா செய்ய: கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, துருவின இஞ்சி சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்த பிறகு ரவையை சேர்த்து கலந்துவிடவும். உப்புமாவை ஆற வைக்கவும்.
- 2
அடுத்து உப்புமா தோசை செய்ய: தோசைச்சட்டியில் மாவை ஊற்றி, தோசை பாதி வெந்தவுடன் அதில் செய்து வைத்த உப்புமா, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இட்லி பொடி சேர்த்து முழுவதும் பரப்பி அதன் மேல் கொத்தமல்லி இலை தூவி, அதை சுற்றியும் நெய் ஊற்றி சூடவும். பிறகு தோசையை மடிக்கவும்.
- 3
சூடான மற்றும் மொறுமொறுப்பான உப்புமா தோசை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16244759












கமெண்ட் (2)