புதினா ரைஸ்(mint rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஆழாக்கு பாசுமதி அரிசி இருமுறை கழுவி இரண்டரை ஆழாக்கு தண்ணீர் விட்டு பத்து நிமிடம் ஊற விடவும். புதினா ஆய்ந்து அலசி வைக்கவும். தேங்காய் துருவி வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 2
புதினா,தேங்காய், வர மிளகாய், இஞ்சி, பூண்டு மிக்சி ஜாரில, நைசாக அரைக்கவும். ரைஸ் குக்கரில்,மூன்று ஸ்பூன் ஆயில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கி விடவும் அரைத்த புதினா விழுது சேர்த்து
நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். - 3
ஊறவைத்த அரிசி, உப்பு தேவையான நீர் விட்டு கலந்து, வேக விடவும். தேவைப்பட்டால் முந்திரி வறுத்து சேர்க்கவும்.
- 4
சுவையான பாசுமதி அரிசியில் செய்த புதினா புலவு தயார். தயிர் பச்சடியுடன் லஞ்ச் பாக்ஸில் வைத்து தரலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16288994
















கமெண்ட்