முறுக்கு(murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவை சலித்து எடுத்து,அதில் உப்பு போட்டு நன்கு பிசைய வேண்டும்.மிக்ஸி ஜாரில் பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம் போட்டு, 2ஸ்பூன் தண்ணீர்விட்டு மைய அரைத்து அதில் சேர்க்க வேண்டும்.பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு இளக்கமாக இருக்க வேண்டும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவேண்டும். மாவை எண்ணெய் தடவிய முறுக்கு குழலில் போட்டு எண்ணெய் தடவிய கரண்டியில் முறுக்கு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 3
மாவை எண்ணெயில் போட்டவுடன் நுரைத்து வரும் முறுக்கு வெந்தவுடன் நுரை அடங்கிவிடும் அதுதான் பக்குவம்.
- 4
இப்போது சூடான சுவையான முறுக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16443979















கமெண்ட்