ஸ்பெகடி போலக்னீஸ்(இத்தாலி ஸ்பெஷல்)(italian spaghetti recipe in tamil)

ஸ்பெகடி போலக்னீஸ்(இத்தாலி ஸ்பெஷல்)(italian spaghetti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
இதில் சிக்கன் சேர்த்து வதக்கி விடவும். சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
தக்காளி அரைத்து எடுத்து இதில் ஊற்றி கொள்ளவும். பிறகு மிக்ஸி கழுவி அந்த தக்காளி அடித்த தண்ணீர் இதில் ஊற்றி கலந்து விடவும்.
- 4
இதில் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சீஸ், ட்ரை பார்ஸ்லி சேர்த்து கலந்து விடவும்.
- 5
மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
- 6
தண்ணீர் வற்றி சிக்கன் வெந்து வரும் வரை வேக வைக்கவும்.
- 7
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு ஸ்பெகடி சேர்த்து வேக வைக்கவும். ஸ்பெகடி யை கட் செய்யாமல் அப்படியே போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 8
ஸ்பெகடி வெந்து வந்த பிறகு அதனை எடுத்து தயார் செய்து உள்ள சிக்கன் தக்காளி சாஸ் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 9
இப்போது தேவைப்பட்டால் சீஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், ஓரிகன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளலாம்.
- 10
கடைசியாக மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சீஸ் தூவி பின்னர் பரிமாறவும்.மிகவும் அருமையாக இருந்தது. இத்தாலி ஸ்பெஷல் ஸ்பெகடி போலக்னீஸ் தயார். நன்றி
Similar Recipes
More Recipes






























கமெண்ட்