கோழி 🐔 சூப்(chicken soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்,கோழியை நன்கு கழுவிச் சிறிது மஞ்சள்தூள்,உப்பு 3/4 வேக்காடாக வேகவைத்து கொள்ளவும்.
- 2
வானலியில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,சோம்பு, பட்டை, சேர்த்து தாளிக்க வேண்டும்.
- 3
பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி- பூண்டு விழுது முதலியவற்றைப் போட்டு வதக்கி,மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு,புதினா,மல்லி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து கொள்ளவும்.
- 4
பின்னர் நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அரைத்தவிழுது,கோழி வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். - 5
அதனுடன் வேகவைத்த கோழிதுண்டுகள் சேர்த்து 10 நிமிடம் சிறுதீயில் வைத்து இறக்கவும்.
- 6
மிளகு,சீரக தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16600747




கமெண்ட்