மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)

பொதுவாக அசைவம் என்றாலே அனைவருக்கும் பிரியம். அதிலும் மட்டன் என்றால் கேட்கவே வேண்டாம். மட்டன் பிரியாணி, குழம்பு என எது வைத்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம். ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒரு வித பலன்களை தருகிறது. அந்த வகையில் மட்டன் தலை கறி குழம்பு செய்முறை பற்றி பார்க்கலாம். இதை குழந்தை பெற்ற தாய்மார்கள் தாராளமாக உண்ணலாம். தலை கறி குழந்தையின் தலை பகுதி நன்கு வளர்ச்சி அடைய உதவுகிறது. #vn

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 விசில்கள் வரை வைத்து வேக வைக்கவும்
- 2
பின் மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, 10 சிறிய வெங்காயம், மிளகாய் வத்தல் சேர்த்து சிறிது நீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்ததும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
- 4
பின் வேக வைத்த கறி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
இரண்டு நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின் அரைத்து வைத்த வெங்காயம் கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- 6
பின் அதில் மஞ்சள் தூள், மட்டன் பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- 7
இப்போது சுவையான மட்டன் தலை கறி குழம்பு ரெடி!
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்