கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)

இந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் விட்டு சூடானதும் உடைத்த கோதுமையை சேர்த்து நன்கு வதக்கவும் பின் பால் மற்றும் தண்ணீர் கலந்து ஊற்றவும்
- 2
குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்
- 3
ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை கலந்து கொள்ளவும்
- 4
பின் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 5
பின் நெய் விட்டு சூடானதும் முந்திரி தேங்காய் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொட்டவும் பின் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
பின் ஏலத்தூள் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான மணமான கோதுமை பாயாசம் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்