பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)

இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை தோல் சீவி துருவி நன்கு அழுத்தி அளந்து எடுக்கவும் பின் அதை குக்கரில் போட்டு தண்ணீர் எதுவும் விடாமல் மூடி வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை கலந்து கொள்ளவும்
- 2
வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் வெள்ளரி விதை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் வேகவைத்த பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்
- 3
மேலும் சிறிது நெய் விட்டு தண்ணீர் வற்றி வரும் வரை நன்கு வதக்கவும் பின் பூசணிக்காயை அளந்த அதே கப்பில் சர்க்கரையை அளந்து சேர்த்து நன்கு கிளறவும்
- 4
சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும் பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கி சூடான நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்
- 5
ஏலக்காய் உடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும் பின் அல்வா உடன் சேர்த்து நன்கு கிளறவும் சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் போது லெமன் சாறு விட்டு நன்கு கிளறவும்
- 6
பின் ஆரஞ்சு ரெட் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் சுழண்டு வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றி வறுத்த முந்திரி வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் பின் ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு ஒரு முறை கிளறி விடவும் சுவையான ஆரோக்கியமான மணமான பூசணிக்காய் அல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்