தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)

இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாக்கெட் தக்காளி சேவையை பிரித்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒருமுறை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு மீண்டும் உப்பு சேர்த்த தண்ணீரில் மிதக்கும் அளவுக்கு பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.அதேபோல் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். தாளிக்க தேவையான எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பத்து நிமிடம் உப்பு தண்ணீரில் ஊறிய சேவையை தண்ணீர் நன்றாக வடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இட்லி பானை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைக்கவும். இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் தண்ணீர் வடித்த இந்த சேவையை பரவலாக வைக்கவும். இட்லி மூடி போட்டு மூடி பத்து நிமிடம் வரை வேக விடவும். வெந்த பிறகு தட்டை மட்டும் தனியாக எடுத்து கீழே வைத்து அதன் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெயை பரவலாக ஊற்றி விடவும். சிறிது ஆற வைத்து எடுத்தால் தனித்தனியாக சேவை உதிரியாக வரும்வரும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை நன்கு வதங்கிய பிறகு ஆறிய சேவையை இதில் கொட்டி கட்டி இல்லாமல் நன்குகிளரி விடவும் பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி விடவும். சேவை நன்கு சூடு ஏறிய பிறகு அடுப்பை நிறுத்தி விடவும் சுவையான தக்காளி சேவை ரெடி.
Similar Recipes
More Recipes
- தலைப்பு : ப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
- கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
- இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
- *செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
- தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)









கமெண்ட்