சீஸ் பிரெட் வெஜ் ஆம்லெட்(cheese bread veg omelette recipe in tamil)

#சண்டே ஈவினிங் ஸ்பெஷல்
சீஸ் பிரெட் வெஜ் ஆம்லெட்(cheese bread veg omelette recipe in tamil)
#சண்டே ஈவினிங் ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான ரொட்டித் துண்டுகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.தக்காளி பொடியாக அறிந்து கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக அறிந்து கொள்ளவும். சீஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும். கடலை மாவு மைதா மாவு பேக்கிங் பவுடர் வர மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் அரை ஸ்பூன் சில்லி பிளேக்ஸ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இரண்டு கப் அளவு வரை தண்ணீர் சேர்த்து கரைக்கவும். பிறகு அறிந்த தக்காளி வெங்காயத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
மேலே stiffing செய்ய கொஞ்சம் நிறுத்தவும். தோசை கல் அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் வெண்ணை தடவிக் கொள்ளவும். வெண்ணெய் இல்லை என்றால் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். பிறகு ஒரு பிரெட்டை பின்புறமாக கரைத்த மாவில் நனைத்துக் கொள்ளவும் மேலே சீஸ் லேயர் வைத்து அதன் மேல் கடலை மாவை பரவலாக கலந்து விடவும். அப்படியே எடுத்து சூடான தோசை கல்லில் வைக்கவும். மேலே ஸ்டப்பிங் போல கொஞ்சம் வெங்காயம் தக்காளி சில்லி ஃப்ளேக்ஸ் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- 3
ஒருபுறம் நன்கு வேக வைத்தவுடன் மறுபடியும் திருப்பி போட்டு லேசாக வெண்ணை அல்லது நெய் விடவும். இரண்டு புறமும் நன்கு சிவந்து வந்த பின் சாசுடன் பரிமாறவும். சுவையான விடுமுறை தின மாலை நேர டிபன் தயார்.😛😃
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்