வல்லாரை கீரை பொரியல்

Devi Bala Chandrasekar @cook_16704000
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
மிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல்
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
மிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை அரைவேக்காடாக வேகவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 3
நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் அலசி நறுக்கிய, கீரையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- 5
கீரை வெந்தவுடன், உப்பு, வெந்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி, இறக்கவும். இந்த பொரியலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8565261



கமெண்ட்