ஒகோனோமியாகி
#குழந்தைகள்டிபன்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மைதா, உப்பு,சர்க்கரை,சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 2
நன்கு கலந்தபின்..கோஸை பொடியாக நறுக்கி மாவில் கலந்து விடவும்.
- 3
இரண்டும் கலந்தபின் உதிரியாக இருக்கவேண்டும்.
- 4
முட்டைகள் சேர்த்து கலந்துவிடவும்.
- 5
10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 6
சாஸ் செய்ய.. ஒரு கப்பில் சர்க்கரை, ஆயிஸ்டர் சாஸ், டொமாடோ கெட்ச்சப்..சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 7
தவாவில் எண்ணெய் சேர்த்து..கலந்த மாவை தோசை வடிவில் ஊற்றி கொள்ளவும். சுற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
- 8
தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.
- 9
2 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 10
தட்டில் வைத்த பின்..கலந்து வைத்த சாஸ் ஐ மேலே ஒரு லேயர் தடவவும்.பின் மயோ சாஸ் கோடுகள் போல் சேர்க்கவும்.
- 11
பின் போனிட்டோ பிலேக்ஸ் சேர்க்கவும். சூடான சுவையான ஒகோனோமியாகி ரெடி.
- 12
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெஸிபி. நீங்களும் உங்கள் வீட்டில் சமைத்து சுவையுங்கள்.
Similar Recipes
More Recipes

































கமெண்ட்