வெஜ் கப்ஸா (அரபிக் வெஜ் பிரியாணி)

சமையல் குறிப்புகள்
- 1
வெஜிடேபுள் ஸ்டாக்கை 3 ½ டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வைக்கவும்.
அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்,
குக்கரில் எண்ணை + பட்டரை காயவைத்து காய்ந்த எலுமிச்சை,வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
அடுத்து தக்காளி,தக்காளி பேஸ்ட் மற்றும் அரபிக் மசாலாவை சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து சமப்படுத்தி.காய் வெந்ததும் அதில் வெஜிடேபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 2, 3 விசில் விட்டு இரக்கவும், சுவையான அரபிக் வெஜ் கப்ஸா (அரபிக் பிரியாணி) ரெடி. காய்கறி சல்சாவுடன்சாப்பிட அருமையாக இருக்கும்
- 3
கவனிக்க: அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இந்த பிரியாணி லைட்ஆக அதே நேரத்தில் ஹெல்தியாகவும் இருக்கும். நான்வெஜ் பிரியர்கள் மட்டன் சிக்கனில் செய்துகொள்ளலாம்.
Similar Recipes
More Recipes



கமெண்ட்