எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!

சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிகாய் நன்கு கழுவி, காம்புகளை அகற்றி நான்காக வாய் கீறி வைத்துக் கொள்ளவும்.
- 2
புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை அடுப்பில் வைத்து, வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க பொன்னிறத்தில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பின் அடி கனமான சட்டியில் எண்ணெய் ஊற்றி கத்திரிகாயை வதக்கவும். அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
- 5
தக்காளி குழைந்தவுடன் அதில் சாம்பார் பொடியை சேர்த்து பிரட்டி புளிகரைசலை ஊற்றவும்.
- 6
உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.வெல்லம் போடவும்.
- 7
நன்கு கொதித்து காய் வெந்து, குழம்பு கெட்டியாகும் பொழுது வெந்தய தூளை சேர்த்து இறக்கவும்.
- 8
கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்