தஞ்சாவூர் ஸ்பெஷல் சின்ன வெங்காய சாம்பார்

தஞ்சாவூர் ஸ்பெஷல் சின்ன வெங்காய சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை மூன்று கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றி வைக்கவும்.
- 2
கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.2.வெந்தயம், கடலை பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும். கடைசியில் தனியாவை வறுத்து எடுக்கவும்.ஆற விடவும்
- 3
கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். புளி கரைசல் சேர்க்கவும் உப்பு,மஞ்சள் பொடி,பெருங்காயம்,சாம்பார் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 4
வறுத்த பொருட்களை துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஓரளவு நைஸாக அரைக்கவும்.கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 5
புளி கரைசல் பத்து நிமிடங்கள் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும். இரண்டு நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பை சேர்த்து மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விடவும். மல்லி இலை, கறிவேப்பிலை சேர்க்கவும். கம கம சாம்பார் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்