சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்து எடுக்க தேவையான கோதுமை மாவு, உப்பு, ஒலிவ் எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கஸ்தூரி மேத்தி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா பொடி,சீரக பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
இனி சப்பாத்தி உருளைகள் பிடித்து வைக்கவும்
- 4
ஒரு உருளை எடுத்து சிறிய வட்டத்தில் தேய்த்து ஊருளைகிழங்கு உருளை இடையில் வைக்கவும், பின்னர் அடைத்து சப்பாத்தி பருவத்தில் ஆக்கி எடுக்கவும்
- 5
பின்னர் மீடியம் தீயில் சுட்டு எடுக்கவும்
- 6
இது போல் எல்லா உருளைகளை செய்து எடுக்கவும்
- 7
குழந்தைகளுக்கு பிடித்தமான ஆலு பராட்டா சுடாக வெண்ணை தேய்த்து டோமேடா சாஸ் சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9147269




கமெண்ட்