கர கர மொறு மொறு குணுக்கு
மாலை நொறுக்கு தீனி
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பருப்பு,அரிசி மற்றும் மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
ஊறிய பருப்பை மிளகாய், உப்பு சேர்த்துஅரைக்கவும்.
லேசாக தண்ணீர் சேர்க்கலாம். கொஞ்சம் கெட்டியாககொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.ப் - 4
அரைத்த பருப்பை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து பிசையவும். பெருங்காயம், கறிவேப்பிலை மல்லி சேர்த்து வடை பதத்தில் கலந்து வைக்கவும்.
- 5
கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்றாக கரகரவென்று பொரித்து வடிகட்டியில் எடுத்து வைக்கவும்.கர கர மொறு மொறு குணுக்கு தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9217435






கமெண்ட்