பலாகொட்டை பொரியல்
#பொரியல்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பலாக்கொட்டை தோலை நீக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பலாக்கொட்டையை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
ஒரு பிரஷர் குக்கரில் பலாக்கொட்டை போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து 3 விசில் வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 4
மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 5
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வற்றல் மிளகாய் அரைத்து வைத்த தேங்காய் விழுது, கறிவேப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும்.
- 6
அதனுடன் பலாக்கொட்டையை சேர்த்து மசாலாவில் நன்கு பிரட்டி எடுக்கவும். 5-7 நிமிடங்கள் மெல்லிய தீயில் வதக்கவும்.
- 7
சுவையான பலாகொட்டை பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10514410








கமெண்ட் (3)