உருளைக்கிழங்கு கோழி குழம்பு
#உருளைக்கிழங்கு சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் -ஐ சுத்தம் செய்து சிக்கன் மசாலா பொடி, உப்பு, மிளகு தூள் சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரித்து கொள்ளவும்.
- 3
ஒரு பட்டை, ஏலக்காய் சேர்த்து தாழிக்கவும். பின் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பட்டைஏலக்காய் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து கொள்ளவும்.
- 5
நன்றாக வதங்கியதும் தோல்
சீவி நறுக்கிய உருளைக்கிழங்குசேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். - 6
உருளைக்கிழங்கு பாதி வெந்து இருக்கும் பொழுது சிக்கன் கலவையை சேர்த்து கிளறி விடவும்.தண்ணீர், உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
- 7
சிக்கன் நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- 8
ஒரு கொதி கொதிக்க விட்டுக் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட்