முறுக்கு (Murukku Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் அதனுடன் காரத்திற்கேற்ப மூன்று அல்லது ஐந்து வரமிளகாயை சேர்த்து ஊற வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை நைசாக பொடி செய்து கொள்ளவும். பின்பு ஊறவைத்த அரிசி மிளகாயை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு,தேவையான அளவு உப்பு, ஓமம் அல்லது சீரகம்,எள் மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும், முறுக்கு மனையில் அக்கு வடிவ அச்சை எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை நிரப்பவும்
- 5
ஒரு அகலமான கரண்டியின் பின்புறம் முறுக்கு மாவை பிழிந்து விடவும். பின்பு அதனை சூடான எண்ணெயில் சேர்க்கவும்
- 6
முறுக்கு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். எண்ணெய் பொங்குவது நின்றதும் வடித்து எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முறுக்கு தயார் 😋
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்